Sunday, June 12, 2016

வரலாற்று ஆய்வின் நுழைவாயில்.

அல்ஹம்துலில்லாஹ். 

அல்பத்ர் ஜிஹாதிய களத்துடன் எனக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது. யாராவது இடக்குமடக்காக திட்டமிட்டால் நான் சொன்னது எழுத்துடனான தொடர்பு என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.

இன்று இதனை நான் பேசுவதற்கு காரணம் இருக்கிறது.

முகநூலில் இரண்டு வஹ்ஹாபிய இளைஞர்கள் நண்பர்களானார்கள். இருவரும் எழுதுபவர்கள். இமாம் அப்துல் வஹ்ஹாபைப் பற்றி நான் அறியாத பல விடயங்களை சொல்லத் துவங்கினார்கள். விழியுயர்த்தி வாய்பிளந்து ஆவலுடன் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
திடீரென அதனை நிறுத்தி விட்டு அதனைவிடவும் சுவாரஷ்யமான விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நேற்று ஒருவரின் பதிவொன்று இப்படி பதிவேறி இருந்தது.
வழமை போலவே எதிரணியில் நான் மட்டும்.
விளங்கப்படுத்த முனைகின்ற போது கேள்வி மேல் கேள்விகள், எல்லாமே கேட்டுக்கேட்டு புளிச்சுப்போன அதே பொய்கள்.
விஷயத்திற்கு வருகிறேன். வழமைையாக எல்லோரும் சொல்கின்ற அந்த தாரக மந்திரத்தையே அந்த சகோதரரும் சொன்னார். "இஸ்லாத்தில் போர் செய்வதற்கான விதிமுறைகள் உண்டு, கட்டுப்பாடுகள் உண்டு, அவர்கள் செய்வது காட்டுமிராண்டித்தனம், கழுத்தறுப்பது இஸ்லாமில்லை" என்று சொன்னார்.
வழமைையான அதே பதிலையே நானும் சொன்னேன். "அவர்கள் செய்வது சரியான முறையல்ல, அப்படியாயின் ‪#‎எது‬ சரியான முறை"???
இதற்கு அறிஞர் பெருமக்கள் சொல்கின்ற விடை தான் "அதனை சொல்லுமளவிற்கு எனக்கு ஆழ்ந்த இஸ்லாமிய அறிவு இல்லை" என்பது. ஆனாலும் இந்த சகோதரர் சற்று வித்தியாசமாக "‪#‎பெண்கள்‬,‪#‎சிறுவர்கள்‬‪#‎மரங்கள்‬ போரினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவர்கள் மக்கா மதீனாவிற்கிடையிலான#பத்ர் ஐ தெரிவு செய்தார்கள்" என்று சொன்னார்.
நான் ஆச்சர்யப்படவில்லை, ஒரு வருடத்திற்கு முன்பு நானும் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பேன். ஆனாலும் இஸ்லாத்தின், பெருமை மிக்க வரலாற்றின் ஒரு பெரும் பகுதி முஸ்லிம்களிடம் மறைக்கப்பட்டு வருகின்றது. இதனை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
>பத்ர் போரை தூண்டியவர்கள் நபி(ஸல்) அவர்களே!
>வெறும் 30 பேர் கொண்ட அபூ சுபியானின் வியாபார கூட்டத்தை மடக்குவதற்காகவே நபி(ஸல்) அவர்கள் 313+ சஹாபாக்களுடன் வந்தார்கள்
>இதைக்கேள்விப்பட்ட அபூசுபியான் வேறு வழியில் செல்கிறார்,
இதனைக் கேள்விப்பட்ட குறைஷிக் காபிர்கள் மூன்று மடங்கு படையை திரட்டிக்கொண்டு வருகின்றனர். அதனால் தான் பத்ரில் போர் நடந்தது.
இதுதான் அந்தப்பதிவு.
இன்னொரு கொசுறு செய்தி.......
எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதே கருத்தில்தான் இருக்கிறார்கள்.
ஆனால், நான் அப்படியான கருத்தில் இல்லை. ஏனெனில், இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் யுத்தத்துக்கு இதனைவிட வலுவான இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.

No comments:

Post a Comment